×

கொரோனா வைரசை கண்டறிய தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு 1000 யுவான் பரிசு: சீன அரசு அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு 1000 யுவான் பரிசளிப்பதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு தினமும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இருந்தும் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் பரிசோதிக்க அச்சப்படும் மக்களின் பயத்தை போக்க, தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும் மக்களுக்கு 1000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் ரூபாய் பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த ஹூபே மாகாணத்தில் சீன அரசு முதலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் வந்து பரிசோதிப்பவர்களுக்கும் பரிசு தருவதாக சீனா நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.   

ஜாக்கிசான் பரிசு

இதற்கிடையில், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவரும் நடிகருமான ஜாக்கிஜான், இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம் என்பதை தன்னைப் போன்று பலரும் நம்புவதாக கூறியுள்ளார். அதனால் தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்கள ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Chinese ,Yuan , Corona virus, test, reward , Chinese government
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...